home >> About Me
About Me


உன் வாழ்விற்க்கான கடவுளின் நோக்கம் ஒருபோதும் தடைபடாது

             விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள் என்ற பெயரில் பகுதி நேரமாக மெய்தெய்வம் இயேசுகிறிஸ்துவைக் குறித்து பலவழிகளிலும்அறிவித்துவரும் அடியேன் (சகோ.டேவிட்தாமோதரன்) வாழ்வில்கர்த்தர்செய்தஅற்புதங்களைசாட்சியாக உங்களோடு பகிர்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன். “தேவரீர் என் விளக்கை ஏற்றுவீர்: என் தேவனாகிய கர்த்தர்; என் இருளை வெளிச்சமாக்குவார்” என்ற சுங்கீதம் 18:28 வசனத்தின் படியாகநம்பிக்கையற்றநிலையில் மரண இருளில் இருந்த எனக்கு இயேசு வாழ்வளித்து என் வாழ்வினை ஒளிமயமாக்கிய மெய்சாட்சியை உங்களுக்கு அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

எனதுபெயர்டேவிட்தாமோதரன்.

             நான்இந்தியதேசத்தின்தமிழ்நாட்டிலேஉள்ளதூத்துக்குடிஊரிலேபிறந்துவளர்ந்துஇன்றுபெங்களுரு பட்டணத்திலேபகுதிநேர ஊழியம்செய்து வருகிறேன். “உன்னைதாயின்வயிற்றில்உருவாக்குமுன்னே உன்னை அறிந்தேன் என்று எரேமியா 1:5 –ல் சொல்லப்பட்டது போல கர்த்தர் என்னை தாயின் கருவில் தோன்றும் முன்பே தெரிந்தெடுத்தார். எனது தாயின் வயிற்றில் நான் கருவுற்றிருந்த போதுகருவைகலைக்க மருத்துவ மணை சென்றார் எனது தாயார். “நீ செய்வது தவறு” என்ற மனப்போராட்டம் உந்தி தள்ளியதால் மருத்துவ மணையிலிருந்துஅறுவை சிகிச்சைக்காய் அணிந்த உடையிலேயே எனது தாயார் ஒடி வந்துவிட்டார்களாம்.ஒருவேளை கர்த்தர் என்னை அன்றைக்கு காப்பாற்றாமல் இருந்திருந்தால் இன்றைக்கு டேவிட் தாமோதரன் என்ற கிறிஸ்துவின் ஊழியக்காரன் இந்த உலகத்தில் இல்லை. என்னுடைய இரண்டரை வயதில் என் தகப்பனார் மஞ்சள் காமாலை நோயினால்பாதிப்படைந்தார். அந்நேரம் நானும் கரப்பான் நோய் என்ற சிரங்கு நோயினால் பாதிக்கப்பட்டேன்.என் உடல் முழுவதும் பருக்கள் தோன்றி அது புன்னாக மாறியிருந்தது. இந்த நிலையில் என் தகப்பனார் மரித்து போகவே, எனது தாயார் நான்குகுழந்தைகளையும் காப்பாற்ற வேலைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்ப்பட்டது. இப்படிப்பட்ட நிலையில் நான் உடல் முழுவதும் புன்களோடு இருந்தேன். இந்த குழந்தை பிழைக்காது என்று சொல்லியவர்கள் அநேகர். என் தாய் வேளைக்குசெல்லும்பொழுது பக்கத்து வீட்டில் வசித்தவர்கள் பார்த்துக்கொள்வார்கள். ஆனால் யாரும் என்னை து}க்க மாட்டார்களாம். ஏனென்றொல் என் உடலின் புன்களிலிருந்து இரத்தம் கலந்த நீர் வடிந்து கொண்டே இருக்கும். ஆனால் எனது வீட்டிலிருந்த நாய் என்னை அதிகம் நேசித்து எனதருகினில் படுத்துக்கொள்ளும்.அந்த நாயானது எனது காலில் இருந்து வடியும் இரத்தம்கலந்த நீரை நக்கி என்னை சுத்தப்படுத்த தொடங்கியது. மரித்து விடுவான் என மருத்துவர்களும் கைவிட்டிருந்த நிலையில் கர்த்தராகிய இயேசு எனக்கு ஜீவனைத்தந்தார். கர்த்தர் மிகப்பெரிய மருத்துவர்களைக் கொண்டு அல்ல, ஒரு சிறிய நாயைக் கொண்டு என்னை குணமாக்கினார். தேவன் சகலத்தையும் செய்ய வல்லவராயிருகின்றார்.

                       பதினாறாம் வயது வரை இரட்சிப்பின் அனுபவம் இல்லாத கிறிஸ்தவனாய் வாழ்ந்து வாழ்ந்தேன். உலக இச்சைகள் என்னை இழுக்ககவே, கர்த்தரை விட்டு தூரமாய்ப் போனேன். எனது 17 ம் வயதினில் கெட்ட நன்பர்களின் மிகுதியால் அநேக பாவ பழக்க வழக்கங்களுக்கு அடிமையானேன். நன்பர்களோடு இணைந்து பல தவறானசெயல்களில் ஈடுபட்டதால், நான் படித்த பள்ளியிலிருந்து என்னை நீக்க பள்ளி நிர்வாகம் முடிவு செய்தது. அந்த நாள் இரவில் என்னை படிக்க வைக்க என் தாயார் பட்ட கஷ்டங்களை நினைத்து கண்ணீர் சிந்தினேன். அடுத்த நாள் பள்ளிக்கு எனது தாயாரை அழைத்து சென்றேன். விதவைத் தாயின் தோற்றத்தைப் பார்த்த பள்ளியின் தலைமை ஆசிரியர், என் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். அதை கண்ட எனது தாயின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. எனது உள்ளம் உடையவே அன்றிலிருந்து என் தாயாருக்கு கீழ்படிந்து வாழ முடிவு செய்தேன். மாலையில் வீட்டுக்கு சென்று அம்மாவிடம், இனிமேல் உங்களுக்கு கீழ்படிந்து நடப்பதாக கூறினேன். எனது வீட்டின் அருகில் இருந்த ஆலயத்தில் ஒரு கண்வென்சன் கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அந்த கூட்டத்திற்கு வால்போஸ்ட் (சுவரில் ஓட்டும் போஸ்டர்கள்) ஓட்ட வாலிபர்கள் தேவைப்படுவதாக என் பக்கத்துக்கு வீட்டில் வசித்தவர்கள் எனது தாயாரிடம் சொல்லி இருந்தார்கள். ஆலயத்துக்கு சென்றால் மகன் முழுவதுமாக மாறிவிடுவான் என்று எண்ணிய எனது தாயார், என்னை அங்கு சென்று வால்போஸ்ட் ஓட்டும் படி கூறினார். மறுப்பேதும் சொல்லாமல் அந்த ஆலயத்திற்கு சென்றேன். இரவு நேரத்தில் தான் வால்போஸ்ட் ஓட்டுவார்கள். நானோ மாலையிலே அங்கு சென்றுவிட்டதால் ஆலயத்தில் யாரும் இல்லை. தனிமையில் அமர்ந்திருந்த எனக்கு, அங்கே அலமாரியில் இருந்த வேதம் கண்னுக்கு தெரிந்தது. சிறுவயதிலிருந்து பல வருடங்கள் வேதத்தை ஏனோ தானோ என்று வாசித்திருக்கிறேன். ஆனால் அந்த இரவில் வேத்தை திறந்து வாசிக்கும்படியானஉள்ளுணர்வைப் பெற்றேன். தயக்கத்தோடு வேதத்தை திறந்தேன். “என் மகனேஉன் சிநேகிதனுடைய கையில் நீ அகப்பட்டுக் கொண்டபடியால்நீ உன்னைதப்புவித்துக்கொள்ள ஒன்று செய். உன் கண்ணுக்கு நித்திரையும்,உன் கண்ணிமைக்குத் து}க்கமும் வரவிடாமல், உன் சிநேகிதனிடத்தில் போய்,உன்னைத் தாழ்த்தி, அவனை வருந்திக் கேட்டுக்கொள். வெளிமான்வேட்டைக்காரன் கைக்கும், குருவி வேடன் கைக்கும் தப்புவது போல, நீ உன்னை தப்புவித்துக்கொள்” என்ற நீதிமொழிகள் 6:3-5 ம் வசனம் வந்தது.இந்த வார்தைகள், பாசம் மிகுந்த தகப்பனானவர், தனது அன்பு மகனை நோக்கி கூறுவதைப்போல உணர்தேன். “என் மகனே, நீஉன்னை தப்புவித்துக்கொள்” என்ற வார்த்தைகள் மீண்டும் மீண்டுமாய் இதயத்தில் ஒலிக்கவே, கர்த்தருடைய குரலுக்கு செவி சாய்த்தேன்.எனது பாவ நன்பர்களையும்;அவர்களை மகிழ்விக்க நான் பழகிய பாவ பழக்கவழக்கங்களையும் விட்டு விலகினேன். ஞாயிறு தோறும் அந்த ஆலயத்திற்கு செல்ல தொடங்கினேன். முழுகி ஞானஸ்நானம் பெற்று எனது புதிய வாழ்வினை கிறிஸ்துவில் தொடங்கினேன்.

                   சராசரி மாணவனாக பள்ளியிலும் கல்லூரியிலும் தேர்ச்சி பெற்றேன். கல்லூரி பருவத்தில் பல முறை பழைய பாவ வாழ்கையில் விழுந்தேன். கிறிஸ்து தமது கிருபையாலே என்னை ஒவ்வொரு முறையும் தூக்கினார். வேத்தில் சொல்லப்பட்டபடி பரிசுத்தமாய் வாழ்ந்தால், தேசத்தில்ஆசிர்வதிக்கப்பட்டிருப்பாய்என்ற வாக்குறுதியை அளித்தார். நானும் இயேசுவுக்கு கீழ்படிந்து வாழ்ந்தேன். அவர் வாக்களித்த ஆசீர்வாதங்கள் என் வாழ்வில் நிரைவேற தொடங்கியது. எனது 21 ம் வயதிலே, தமிழ் வழியில் கல்லூரி வரை பயின்ற எனக்கு மிகப்பெரிய அமெரிக்க நிறுவனத்தில் எனக்கு வேலை கிடைத்தது. அநேக மக்களுக்கு மத்தியில் கர்த்தர் என் தலையை உயர்த்தினார். நோஞ்சான், எலும்பன், ஒன்றுக்கும் உதவாதவன் என்று உலகம் ஒதுக்கிய என்னை கர்த்தர் பல தேங்களுக்கு கொண்டுசென்றார்.இயேசுவினிடத்திலிருந்து அநேக ஆசீர்வாதங்களை பெற்றுக்கொண்ட நான், இயேசுவுக்காக எதையாவது செய்ய வேண்டுமென சொல்லி பாரத்தோடு ஜெபித்து வந்தேன். எனது 25ம் வயதினில்பெங்களுரு பட்டணத்திலே, நான் வசித்து வரும் பகுதியை சுற்றியுள்ள குடிசைகளில் வாழும்சிறுவர்களுக்கு ஒய்வு நாள் வகுப்புகள் மூலமாக கிறிஸ்துவின் அன்பை அறிவிக்க தொடங்கினேன். இரண்டு வருடங்கள அந்த ஊழியத்தில் அநேக காரியங்களைக் கற்றுக்கொடுத்தார். அநேக புதிய பாடல்களையும் கொடுத்தார். அதன் விளைவாக “விசுவாசத்தில் வாழக்கை கீதங்கள்” பாகம் ஒன்றை 2013-ல்வெளியிட கர்த்தர் உதவினார். சிறுவர்களுக்கான ஒய்வு நாள் வகுப்புகளை நடத்த அநேக வாலிபர்கள் முன் வந்தார்கள். இந்த நிலையில் விக்கிரகங்கள் நிறைந்த கிராமங்களில் சென்று ஜெபநடை செய்து சுவிஷேச பிரதிகளைக் கொடுகத்து நற்செய்தியை அறிவிக்கும் படியாக கர்த்தர் வெளிப்படுத்தினார். அதின்படியாக தமிழ்நாட்டில் விக்கிரகங்கள் நிறைந்த நாமக்கல் ஊரை சுற்றியுள்ள அநேக கிராமங்களில் பல நூறு கிலோ மீட்டர்கள் நடந்து ஜெபித்துள்ளோம். மேலும் மின்னஞ்சள், மொபைல் குறுஞ்செய்தியின் முலமாகவும் கர்த்தருடைய வார்த்தைகளை அநேகருக்கு அறிவிக்கின்றோம்.

             “உன்னை தாயின் வயிற்றில் உருவாக்குமுன்னே உன்னை அறிந்தேன் என்று எரேமியா 1:5 –ல் உள்ளதைப்போல, நம் ஒவ்வொருவரைக்குறித்தும் இயேசு ஒரு நோக்கதை வைத்துள்ளார். அந்த நோக்கம் நிறைவேறாதபடிச் செய்ய சத்துருவானவன் எழும்பினாலும், சர்வ வல்லவர் செய்ய நினைத்ததை யாரும் தடை செய்ய முடியாது. என்னுடைய வாழ்வில் சத்துருவானவன் என்னை அழ்க்க பல திட்டங்களை தீட்டினாலும், சர்வ வல்லவர் என் மூலமாய் செய்ய நினைத்ததை, அவனால் தடை செய்ய இயலவில்லை. அதேப்போலவே உங்கள் வாழ்விற்க்கான நோக்கத்தையும் திட்டத்தையும் ஆண்டவராகிய இயேசு நிச்சயம்நிறைவேற்றுவார். ஆகவே நீங்கள் செய்யவேண்டியதெல்லாம், இயேசுவின் பலத்த கரத்தில் அடங்கியிருந்து அவருடைய சித்ததின் படிவாழ உங்களை ஒப்பககொடுங்கள். என் வாழ்க்கையில இயேசுவின் நோக்கமும் திட்டமும் நிறைவேருவதைப் போலவே உங்கள் வாழ்விலும் கடவுளின் நோக்கமும் திட்டமும் நிறைவேறுவதாக. ஆமேன்.

கிறிஸ்துவின் பணியில்

சகோ.டேவிட்தாமோதரன்

விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்