home >> Contact Us
Contact Us




எமது ஊழியத்தைப் பற்றி..
          இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு எமது அன்பின் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம். கடந்த 2011 ம் வருடம் விசுவாசத்தில் வாழ்க்கை என்ற தன்னார்வமாய் செயல்படுகின்ற ஊழியத்தை துவங்க கர்த்தர் கிருபை செய்தார். 2011 –ம் வருடம் ஏப்ரல் மாதத்தில் பெங்களூரு பட்டணத்தில் குடிசைப் பகுதிகளில் வாழ்ந்த சிறுவர்களுக்கு கிறிஸ்த்துவின் அன்பை அறிவிக்க தொடங்கினோம். இருபது குழந்தைகளைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட சிறுவர் ஊழியமானது இரண்டு வருடத்தில் இருநூற்று ஐம்பது குழந்தைகளைத் தொட்டது. அது தான் கர்த்தர் எங்களுக்கு கொடுத்த முதல் ஊழியம்.

            அந்த நாட்களில் சிறுவர் ஊழியம் தான் எமது அழைப்பு என்று செயல்பட்டுக் கொண்டிருந்தோம். கர்த்தர் தரிசனத்தின் மூலமாக கிராமங்களுக்கு சென்று ஜெபநடை செய்து நற்செய்தியை அறிவிக்க வேண்டுமென்று எங்களோடு இடைபட்டார். நாங்கள் செய்து வந்த சிறுவர் ஊழியத்தை எமக்கு தெரிந்தவர்களிடம் ஒப்படைத்து விட்டு, கிராமங்களுக்கு சென்று ஜெபநடை செய்ய தொடங்கினோம். இயேசு கிறிஸ்துவை அறியாமல் பாவத்திலும் சாபத்திலும் வாழ்கின்ற கிராம மக்களுக்கு கிறிஸ்துவின் அன்பை எடுத்துக் கூறி கைப்பிரதிகள் (Tracts) கொடுத்து இயேசு கிறிஸ்துவின் அன்பை மக்களுக்கு அறிவித்து வருகின்றோம். இன்று வரை தமிழ்நாட்டில் இரநூறுக்கும் அதிகமான கிராமங்களில் ஜெப நடை செய்து இயேசுவின் அன்பை கிராம மக்களுக்கு அறிவித்து உள்ளோம். கிராமங்களில் சென்று ப்ரொஜெக்டர் மூலமாக படங்கள் காண்பித்தும் நற்செய்தியை அறிவித்து வருகின்றோம். நாங்கள் செல்லும் கிராம சபைகளில் ஊழிய பாரம் உள்ளவர்களை எங்களோடு அழைத்துச் சென்று, சுவிசேஷம் அறிவிக்கும் எளிய முறைகளைக் கற்றுக் கொடுத்து, தொடர்ந்து அங்கு நற்செய்தி பரவ பாரத்தோடு செயல்படுகின்றோம்.

        நாங்கள் ஜெபநடை செல்லும் கிராமங்களில் திருச்சபை இல்லாவிட்டால் அங்கு திருச்சபை எழும்பும் பார்த்ததோடு ஜெபித்து வருகின்றோம். அவ்வாறு ஜெபித்ததின் விளைவாக திருநெல்வேலிக்கு அருகில் இருக்கும் மானூர் கிராமத்தில் நமது முதலாவது திருச்சபை கட்டுமானப் பணியை துவங்க கர்த்தர் கிருபை தந்துள்ளார்.

               2014-ம் வருடத்திலிருந்து Email, WhatsApp மற்றும் Facebook மூலமாக அநேகருக்கு தேவ செய்திகளை வழங்கி வருகின்றோம். இந்த ஊழியத்தின் மூலாமாக ஒவ்வொரு நாளும் பத்தாயிரத்திற்க்கும் அதிகமான மக்களுக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகின்றது. இந்த தளத்தின் “Home Page” ல் சென்று உங்கள் மின்னஞ்சல் முகவரியையும், Whatsapp Number-யையும் பதிவு செய்து நீங்களும் இந்த இலவச சேவையில் இணைந்து பயன் பெறுங்கள்.

              வாரத்தின் ஏழு நாட்களும், 24 மணி நேரமும் வானத்தின் வாசல் ஜெப கோபுரத்திலிருந்து எமது ஜெபக்குழுவினர் உங்களுக்காக ஜெபிக்கின்றார்கள். ஜெபஉதவி எண் +919952649421 - க்கு அழைத்து உங்களுக்கான ஜெபத் தேவைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

                இந்த ஊழியம் தொடர்ந்து நடைபெறவும் , இந்த ஊழியத்தை ஜெபத்தாலும், பொருளாதார உதவியாலும் தாங்குகின்வர்களை கர்த்தர் தாமே ஆசீர்வதிக்கும்படியாக ஒவ்வொரு நாளும் ஜெபிக்க மறவாதிருங்கள்.

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக. ஆமென்

இயேசு கிறிஸ்துவின் நற்செய்தி பணியில்,
விசுவாசத்தில் வாழ்க்கை ஊழிய குழுவினர்.

Address :

            Bro. David Thamotharan
            Vimanapura Post,
            Bengaluru,
            Karnataka - 560 017.

Phone :

      Bro.David Thamotharan
          - 09916 424517 (Inside India)
          - 0091 9916 424 517 (Outside India)
      Bro. Daniel
          - 09739 833659 (Inside India)
          - 0091 9739 833659 (Outside India)

Mail Id :

            vvministry@gmail.com

Facebook :

            Visuvasathil Valkai Ministries

            மிஷனரி வாழ்க்கை வரலாறு

Blog :

            Visuvasathil Valkai Ministries